இவர்தான் ஆண்டர்ஸ் ஹெல்ஸ்பெர்க், டெக்னாலஜியை பற்றி மிகவும் அருமையாக உரை நிகழ்த்துவார், இண்டர்நெட்டில் இவரின் விடியோ அதிகம் உள்ளன, நானும் முடிந்த அளவு அவரின் விடியோக்களை தொகுத்து இங்கு கொடுக்கிறேன். சி#, ஒரு முழுமையான OOPS மொழியாகும், இது இலவசமாக டாட்நெட் பிரேம்ஒர்க் உடன் கிடைக்கிறது. இப்போது வரும் மைக்ரோசாப்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டம் உடன் டாட்நெட் பிரேம்ஒர்க் வருகிறது, அதனால் சி# நமக்கு இலவசமாக கிடைக்கிறது.
முதல் பதிப்பு 1999ல் வந்தது, இப்போது சி# 4.0 உள்ளது, மைக்ரோசாப்ட் இதனை மேம்படுத்தி கொண்டே வருகிறது, இதனின் தாக்கம் எங்கும் அதிகம். விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் மட்டும் அல்ல, லைனிக்ஸ் போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்களும் டாட்நெட் பிரேம்ஒர்க்கை சப்போர்ட் செய்கின்றன், வரும் காலங்களின் அனைத்து ஆப்ரேட்டிங் சிஸ்டங்களும் கண்டிப்பாக டாட்நெட் பிரேம்ஒர்க்கை சப்போர்ட் நிலைக்கு தள்ளபட்டு விடும், அல்லது, மைக்ரோசாப்ட் அதனை ஏதாவது ஒரு வகையில் சாதித்துவிடும், அப்போது இதன் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும்.
வரும்காலத்தில் எல்லாம் மொபயிலில் தான் இருக்கு, அதனை ஏற்று கொள்ளும் விதத்தில் ஒரு மொழிதேவை, ஜாவா ஓரளவுக்கு அதனை பூர்த்தி செய்கிறது, ஆனால் சி# மேலும் நன்றாய் அதனை சப்போர் செய்யும்.
இங்கு நான் சி# பற்றிய அறிமுகம் மட்டுமே கூறினேன், மேலும் OOPS பற்றியோ, அல்லது முதல் புரோக்கிராம் (Hello World) என்று ஆரம்பிக்க போவது இல்லை. இங்கு தொரிந்துகொள்ள போவது எல்லாமே அட்வான்ஸ் கான்சப்ட்தான், பேசிக் பற்றி நான் இங்கு சொல்ல போவதில்லை...
தமிழில் சி# பற்றி படிக்க மு. சிவலிங்கம் என்பவர் மிகவும் அருமையாக தமிழ்கம்யூட்டரில் எழுதி அது வளர்தொழில் பதிப்பகம் மூலமாக கடைகளில் கிடைக்கிறது. அவர்களின் முகவரி...
வளர்தமிழ் பதிப்பகம்
37, அஜீஸ் முல்க் இரண்டாம் தெரு
ஆயிரம் விளக்கு, சென்னை – 600 006.
தொலைபேசி: (044) 28292390, 28293230
மேலும் சி# பற்றி பேசிக் தெரிந்து கொள்ள
- http://www.csharp-station.com/Tutorial.aspx
- http://msdn.microsoft.com/en-us/vcsharp/aa336809.aspx
- http://www.csharpkey.com/csharp/
தயவுசெய்து சி# பேசிக் பற்றி தெரிந்து விட்டு இங்கு தொடருங்கள். அதாவது சி# முதல்பதிப்பான C# 1.0, பற்றி நன்றாய் தெரிந்துவிட்டு நாம் 2.0, 3.0, 3.5, 4.0 இப்படி போகலாம்.... புரோக்கிராம் செய்வது ஒரு போதை போல், அடிமை ஆகிவிட்டோம் என்றால்... சந்தோசமாகத்தான் இருக்கும்... :)
வாருங்கள் தொடரலாம்.
3 comments:
testing
Follower ஆக முடியவில்லை படுத்துதே
ஜதாகுமுல்லாஹ். சிசார்ப் மொழி படிக்க ஆர்வமாக உள்ளேன். முடிந்தால் பயிற்சி அறிமுகமொன்றைப் படிப்பதற்கு ஒரு தளத்தைக் காட்டுங்களேன். நன்றி மாஸலாம்.
Post a Comment